கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறைமையை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்த குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தராமல் விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்று அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவான கட்டணம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், வங்கிக் கணக்கில் வைப்பிலிடலாம்.
அத்துடன்,நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 50 பிராந்திய செயலகங்களுக்கு தேவையான கைவிரல் அடையாளங்களைப் பதிவுசெய்ய முடியும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மூன்று நாட்களின் பின்னர், பதிவுத் தபால் மூலம், விண்ணப்பதாரரின் வீட்டுக்கே, கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.