எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 3% மின்சார கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலவரப்படி மின்சாரக் கட்டணத்தை உண்மையில் 27% குறைக்க முடியும் என இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் தெரிவித்தார்.
தவறான தரவுகளின் அடிப்படையில் அதிகாரிகள் மக்களை தவறாக வழிநடத்துவதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.