follow the truth

follow the truth

January, 16, 2025
Homeவணிகம்SLIM Kantar People’s Awards 2023 நிகழ்வில் Coca-Cola Sri Lankaவுக்கு மாபெரும் வெற்றி

SLIM Kantar People’s Awards 2023 நிகழ்வில் Coca-Cola Sri Lankaவுக்கு மாபெரும் வெற்றி

Published on

சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக நாட்டில் இயங்கி வரும் முன்னணி குளிர்பான வர்த்தக நாமமான Coca-Cola Sri Lanka, SLIM Kantar People’s Awards நிகழ்வில் கௌரவமான “Beverage Brand of the Year” மற்றும் “Youth Choice Beverage Brand of the Year” ஆகிய விருதுகளை பெற்றுள்ளது.

2023, Sri Lanka Institute of Marketing நிறுவனத்தால் (SLIM) நடத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டிலும் இதே பாராட்டுகளை Coca-Cola Sri Lanka பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 18 மாதங்களில், இந்த வர்த்தக நாமம் சந்தைப்படுத்தல் கண்டுபிடிப்புகள் மற்றும் முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. இலங்கை பார்வையாளர்களுடன் தொடர்ந்து எதிரொலிக்கும் புத்துணர்வு டிஜிட்டல் அனுபவங்களும் இதில் அடங்கும்.

Coca-Cola Sri Lanka, Daraz மற்றும் Kapruka போன்ற முன்னணி e-commerce தளங்களிலும், Keels, Cargills, Glomark, Spar, Laughs போன்ற முன்னணி ஆன்லைன் சில்லறை விற்பனைச் சங்கிலிகளிலும் Uber மற்றும் PickMe போன்ற விநியோக பங்காளிகளிலும் விரிவான தயாரிப்பு இருப்பைக் கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறது.

மேலும், உணவு சேர்க்கைகளை உருவாக்க மற்றும் ஆன்லைனில் வாங்குவதற்கான அணுகலைப் பெற முன்னணி துரித உணவு சங்கிலிகளுடன் ஒன்றிணைந்து நிறுவப்பட்டுள்ளன. Pizza Hut மற்றும் McDonald’s ஆகியவை சில குறிப்பிடத்தக்க உதாரணங்களாகும்.

No description available.

இந்த வர்த்தக நாமத்தின் டிஜிட்டல் பிரசன்னம் மிகவும் வலுவான ஒன்றாகும், மேலும் Coca-Cola தனது டிஜிட்டல் தளங்களை நுகர்வோருடன் ஒன்றிணைந்த செயற்படுவதற்காக தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

Coca-Cola இன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்திய சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி அனோஜா இரத்னசபாபதி கருத்து தெரிவிக்கையில், “இந்த விருதுகளை வென்றது எங்கள் முழு குழுவின் கடின உழைப்புக்கான உண்மையான மரியாதை மற்றும் சான்றாகும். எங்கள் நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இளமை, புத்தாக்கமான, மேம்படுத்தும் மற்றும் உற்சாகமான அனுபவங்களை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”

Coca-Cola Beverages Sri Lanka Ltd. இன் விற்பனை மற்றும் வர்த்தகப் பணிப்பாளர் ஷமல் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், “உங்கள் விருப்பமான பான வர்த்தக நாமமாக Coca-Cola ஐ தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. இந்த விருதுகள் எமது வாடிக்கையாளர்களுடனான எமது வலுவான உறவைப் பிரதிபலிப்பதற்க சாத்தியமாக அமைகின்றன.” என தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டு முதல், SLIM Kantar People’s Awards நிகழ்வு இலங்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வணிக விருது வழங்கும் நிகழ்வாகும். நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழுவை விட நுகர்வோரே தேர்வு செய்வதால் இந்த விருதுகள் தனித்துவமானவை.

இந்த விருதுகள் இலங்கை மக்கள் மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருக்கும் வர்த்தக நாமங்கள் மற்றும் ஆளுமைகளை கௌரவிப்பதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டன.

Coca-Cola தனது வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் புத்தாக்கமான அனுபவங்களை வழங்கும் அதே வேளையில் இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதில் உறுதியாக உள்ளது.

No description available.Coca-Cola Sri Lanka தொடர்பாக Coca-Cola 60 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து வருகிறது, மக்கள் விரும்பும் பானங்களின் வர்த்தக நாமங்கள் மற்றும் தேர்வுகளை வடிவமைப்பதில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. எங்கள் நிறுவனத்தின் நோக்கம் உலகைப் புதுப்பித்து மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்.

எங்களது மதிப்புமிக்க நுகர்வோருக்குச் சிறப்பாகச் சேவை செய்ய, நாங்கள் இப்போது மிகவும் வசதியான பேக்கேஜ்களை வழங்குகிறோம், புத்தாக்கங்களை உருவாக்குகிறோம், மேலும் புதிய குறைந்த மற்றும் சர்க்கரையற்ற பானங்களை அறிமுகப்படுத்துகிறோம். 1961 இல் வர்த்தக முத்திரையான Coca-Cola அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து.

இப்போது Coke Zero, Sprite, Sprite Zero, Fanta Orange, Fanta Cream Soda, Fanta Portello, Kinley Soda, Lion Tonic, Lion Ginger Beer, Kinley Water மற்றும் Monster Energy, உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நாமங்கள் எங்கள் ஆவணக்கோப்பில் உள்ளதுடன் இவை நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு பல்வேறு சுவையான மற்றும் புத்துணர்ச்சி தரக்கூடிய பான விருப்பங்களை வழங்குகிறது.

PET பிளாஸ்டிக் பேக்கேஜிங்கின் மற்றும் மீள்சுழற்சி, நீர் நிரப்புதல் திட்டங்கள் ஆகியவற்றில் எங்களின் நிலைத்தன்மை முயற்சிகள் மூலம் மக்கள் வாழ்க்கை, சமூகங்கள் மற்றும் தேசத்தை கட்டியெழுப்ப முயல்கிறோம் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த Solar விருது வழங்கும் நிகழ்வு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்கள் உட்பட நமது உள்ளூர் சமூகங்களின் நல்வாழ்வை உறுதிசெய்து, இந்த ஆண்டின் Iconic Rooftop Solar செயற்திட்டத்தை எங்களுக்கு வென்றெடுக்க முடிந்தது.

நாங்கள் இலங்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோரை வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம், உள்ளூர் சமூகங்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குகிறோம், மேலும் 25 மாவட்டங்களில் உள்ள 80,000 வர்த்தக ஸ்தாபனங்களுக்கு எங்கள் தயாரிப்புகளை வழங்குகிறோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...