கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து பதவி இராஜினாமா செய்ததும் கண்ணில் படாத ஞானசார தேரர் இப்போது வெளியே வந்து மதப்போதகர் ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வணக்கத்திற்குரிய ஜெரோம் பெர்னாண்டோ புத்தரை அவமதித்துள்ளதாகவும், அவரது அறிக்கைகள் மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் எழுத்து மூலமான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் வேகமாக மதமாற்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கூறும் ஞானசார தேரர், ,மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட தலைவர் என குற்றம் சுமத்தியுள்ளார்.