பிரபல மாடல் அழகிகளின் பெயரில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை போலியாக உருவாக்கி மாடலிங் துறையில் வேலைகள் இருப்பதாக கூறி, அழகான இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தந்திரமாக பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் பிரிவு சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 19 வயதுடைய உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர் ஆவார்.
சந்தேகநபர் பயன்படுத்திய கணனியில் பதினைந்து அழகான இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சந்தேக நபர் வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார் என பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
மாடலிங் துறையில் பணிபுரியும் இரு பிரபல மாடல்களின் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்குகளை ஆரம்பித்து மாடலை விரும்பும் அழகான இளம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவதாகவும் கூறி இவ்வாறு இளம் யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக மின்னணு ஊடக நிறுவனம் மூலம் தகவல் கிடைத்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் ஒவ்வொரு யுவதியுடனும் குறுஞ்செய்தி மூலம் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் ஆலோசனையின் பேரில் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பொலிஸ் பரிசோதகர் பி. வி. ஐ.கயாஸ்ரீ தலைமையில் விசாரணை தொடங்கியதில் தெரியவந்துள்ளது
சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.