ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பி.ஹரிசன் ஜனாதிபதிக்கு ஆதரவாக விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.