அத்தியாவசிய பராமரிப்புக்காக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் ஜூன் 03 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு செயலிழக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மின்சார சபைக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தடையின்றி தொடர்ந்து மின்சார விநியோகம் உறுதி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.