அனுமதி வழங்கப்பட்ட வனப்பகுதிகளில் மாத்திரம் முகாமிடுமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பாதுகாப்பான சுற்றுலா தலமொன்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகிறார்.
கொஸ்லந்த, தியலும பகுதியில் முகாமிட்டிருந்த போது யானை தாக்குதலுக்கு இலக்காகி யுவதியொருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முகாம்களை நடத்தும் அனைத்து நிறுவனங்களையும் முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு, அவற்றை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்வது அவசியமானது என தலைவர் சுட்டிக்காட்டினார்.