காய்நகர்த்தி இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் சென்று அரசியலை வெல்ல முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார, அடிமட்டக் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடனே உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.