மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என இன்று காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நில்வளா மற்றும் ஜிங் ஆறுகளின் கீழ்பகுதிகளில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் என நீர்ப்பாசன திணைக்களம் இன்று காலை அறிவித்தது.