மக்களின் தேவையற்ற நடமாட்டத்தை தடுப்பதற்காக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாடு சில கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்
‘கடந்த புத்தாண்டு காலத்தில் நாங்கள் சுற்றுலா சென்றது மற்றும் யாத்திரை செல்வது போன்ற காரணங்களினால் கொவிட் நிலைமை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். என்றும் அவர் கூறினார்.
எனவே தடுப்பூசி போடப்பட்ட போதிலும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்த ஆண்டு இறுதி வரை கட்டுப்பாடுகள் தொடரப்பட வேண்டும் என்றும் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.