நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்த பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும், அக்குரஸ்ஸ, அதுரலிய, பஸ்கொட, முலட்டியான, கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தின் நாகொட, நெலுவ, பத்தேகம, யக்கலமுல்ல, எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல மற்றும் எஹெலியகொட ஆகிய பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.