சீமெந்தின் விலை அடுத்த வாரம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சீமெந்து பொதி ஒன்றின் விலை 2750 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், அடுத்த வாரம் சீமெந்து பொதியின் விலையை கணிசமான அளவு குறைக்க எதிர்பார்த்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வீடுகளை நிர்மாணிப்பதற்காக கடன் வாங்குவது தடை செய்யப்பட்டதன் மூலம் சீமெந்துக்கான தேவை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.