திருகோணமலையில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள கடற்பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை “மொகா” (Mocha) புயலாக உருவாகி இன்று (12) மாலை மிகவும் தீவிரமான சூறாவளியாக உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு நாளை (14) பிற்பகலில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மார் கரையோரத்தை கடக்கப் போகிறது என்றும் குறித்த திணைக்களம் கூறுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையில் இந்த அமைப்பின் ஊடாக காற்று நீரோட்டங்கள் கடந்து செல்வதால், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் சில இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாத்தறை மாவட்டங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் நாகொட, யக்கலமுல்ல, பத்தேகம, எல்பிட்டிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் தெரணியகல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் மண்சரிவு அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.