தலைவர் இல்லாத நிதிக் குழுவில் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நிரந்தர தலைவர் ஒருவரை நியமித்து அங்கீகரிக்கப்பட்ட அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை விட்டு நிதிக் குழுவுக்கு அரசு சார்பில் ஒரு கையாளை நியமித்து மெக்ரோ அல்ல மைக்ரோ அல்ல நிதி குறித்து ஒன்றுமே தெரியாத ஒரு பப்பட் டீல் காரர் ஒருவரை பொம்மையாக வைத்துக் கொண்டு எந்தவித ஆய்வுகளும் இன்றி எந்தவொரு கலந்துரையாடலும் இன்றி ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கு எவ்வாறு அனுமதி வழங்குவது என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
திவாலான நாட்டில் சட்ட விரோதமாக வேலை செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.