பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸாரின் விசாரணைகளின் போது, உயிரிழந்த மாணவிக்கு ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.