ஹுமைரா அல் அமீனின் முதலாவது நூலான ‘செம்பனிச் சிதறல்கள்’ சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ‘தாஜுல் உலூம்’ ‘தேசத்தின் கண்’ ‘வாழ்நாள் சாதனையாளர்’ ‘தமிழ்மணி’ மானா மக்கீன் அவர்கள் கலந்துகொண்டு முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்கள். அத்தோடு பிரதம அதிதியாக ‘இலக்கிய மாமணி’ சாரணா கையூம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கல்ஹின்னை ‘அருட்கவி’ ஹலீம்தீன் அவர்களின் மூத்த புதல்வர் கவிஞர் ‘தேசமான்ய’ ஃபஹ்மி ஹலீம்தீன் அவர்களும், பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் லைலா அக்ஷியா அவர்களும், தேசிய YMMA இயக்கத்தின் தலைவர் இஹ்ஸான் ஹமீட் உட்பட பல பிரமுகர்களும் அதிபர்களும் ஆசிரியர்களும் வாசிப்பு அபிமானிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
விசேட நிகழ்வாக பிரதம அதிதியவர்கள் கௌரவ அதிதியால் புகழாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வுக்கு கேகாலை சென்ட் மேரீஸ் மகளிர் வித்தியாலய ஆசிரியரான திரு. ஜவாய்டீன் மொஹமட் ராபிழ் அவர்கள் தலைமை தாங்கியதோடு, நூல் நயவுரையினை அஷ் ஷெய்ஹ் இஸட் எம். நிலாம் நலீமி அவர்கள் வழங்கியிருந்தார்கள்.