சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள நிதிநிதியின் முதலாவது மீளாய்வுக்கு இணையாக இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீ நிவாசன் உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.
இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.