பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்களது போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பல நகரங்களில் போராட்டத்தை கலைக்க பொலிசார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஆயிரம் பேரை பஞ்சாப் மாகாண பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது சுமார் 130 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நாட்டில் அதிகரித்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறை காரணமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற பிற சமூக ஊடக வலைப்பின்னல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு நேற்றுமுன் வந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான் கான் 8 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளன. மேலும், பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு அந்த நாடுகளில் வசிப்பவர்களை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.