நானும் டிஹாராவும் மது அருந்திவிட்டு அறையில் சுதந்திரமாக இருந்தபோது அவளது கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பினை ஏற்படுத்தியவனை டிஹாரா திட்டிக்கொண்டே சென்றாள். நாய் வேலை பார்க்காதே, என்னை பிளாக்மெயில் செய்யாதே எனத் திட்டினாள். பின்னர் ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக குதித்தாள் என களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த மாணவியின் மர்ம மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக காலி பிரதேசத்தை கடந்து ஹிக்கடுவைக்கு வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகள் நேற்று காலை பொலிஸ் வீதித்தடைகளை பயன்படுத்தி கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர் கடல் வழியாக படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
“.. என்னுடன் இந்த ஹோட்டலுக்கு வந்த இஷான் எனும் நண்பன் என்னை டிஹாரிக்கு அறிமுகப்படுத்தினார்.
இஷான் என்னிடம் நல்ல துண்டு இருக்கிறது, வேண்டுமானால் செட் செய்து தருகிறேன் என்றார். எனக்கும் பிடித்திருந்தது. அந்தச் சம்பவத்தன்று பிற்பகல் 2.30 மணியளவில் இஷானுடன் நாகொடைக்கு வந்தேன்.
டிஹாரி இஷானின் காதலியுடன் வந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் எனக்கு அவள் மீது ஆசை வந்தது. நான் இஷானிடம் சொன்னேன், பொண்ணு நல்லா இருக்கிறாள், மாலையில் சந்திப்போம்.
அன்று மாலை இஷானுடன் காரில் வந்தேன். இஷானின் காதலி டிஹாரியை அழைத்து வந்து என் காரில் ஏறினாள்.
நாங்கள் நால்வரும் களுத்துறை நாகொட சிசிலியா ஹோட்டலுக்கு வந்தோம். நான் ஒரு சிவப்பு லேபிள் விஸ்கி மற்றும் சில நொறுக்கு தீனிகளை எடுத்துக் கொண்டேன்.
ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்தோம். டிஹாரிக்கு 16 வயது என்பதால் வேறு ஒருவரின் ஐடியை போட்டு அறை ஒதுக்கப்பட்டது.
அன்று இரவு வெகுநேரம் வரை ரெட் லேபிள் விஸ்கியை நாங்கள் நால்வரும் குடித்தோம். சில மணி நேரம் கழித்து, இஷான் தனது காதலியுடன் வெளியேறினார்.
டிஹாரியுடன் அறைக்குச் சென்றேன். அப்போது டிஹாரிக்கு உச்ச போதையில் இருந்தாள்.. நாம் இருவரும் நிர்வாணமாக ஓய்வு நேரத்தை கழித்தோம். நடனமாடினோம்.. கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தோம்.. ஆனால் உடலுறவு கொள்ளவில்லை.. சிறிது நேரம் கழித்து டிஹாரியின் கைபேசிக்கு அழைப்பு வந்தது. அது வந்த பிறகு, அவள் மிகவும் கோபமடைந்தார். கீழான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தாள்.
நாய் வேலை செய்யாதீர்கள் அல்லது பிளாக் மெயில் செய்யாதீர்கள். என அழைப்பை ஏற்படுத்தியவருக்கு திட்டினாள்.
குழப்பத்தில் அலறிக் கொண்டிருந்த டிஹாரி, அறையின் ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறி, உடனே ஜன்னல் வழியாக குதித்தார்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஓடிப்போய் கீழே பார்த்தேன். கீழ் ரயில் பாதை. டிஹாரியின் உடலைக் காணவில்லை.
நான் பயந்து போனதும் இஷானுக்கு அழைப்பை ஏற்படுத்தி சொன்னேன். அந்த பெண் விடுதியின் மேலிருந்து கீழே குதித்து விட்டால். உடல் ரயில் பாதையில் உடனே ஏதாவது செய் எனக் கூறி நான் மெதுவாக அங்கிருந்து சென்றேன்..” என களுத்துறை பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த மாணவிக்கு கடைசியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் யார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாணவியின் மரணத்திற்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் அழைப்பை விடுத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷவின் பூரண மேற்பார்வையில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
பிரதான சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சந்தேக நபர் போதைப்பொருள் கும்பல் அல்லது பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வாடகை செலுத்தாத வாகனங்களை கைப்பற்றும் சீசராக பணிபுரிபவர்.
களுத்துறை நாகொடையில் வைத்து இந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது தோழி மற்றும் காதலன் மற்றும் குழுவை ஹோட்டலுக்கு அழைத்து வந்த காரின் சாரதி ஆகியோரை பொலிஸார் முன்னரே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன் பாடசாலை மாணவி தனது தோழியுடன் தன்சலுக்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அவர்களின் பணிப்புரையின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.