இன்று (10) முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத அத்தியட்சகர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.