எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் (X-Press Pearl) தீப்பற்றியதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்ட ஈடு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(09) முதல்தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கில் இலங்கை சார்பில் சிங்கப்பூர் சட்டத்தரணிகள் சங்கம் முன்னிலையாகவுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி விபத்துக்குள்ளானதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்ட ஈடு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் கடந்த 26 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நஷ்ட ஈட்டு தொகை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.