கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இத்தாலியில் நடைபெற்ற ஃபைரன்ஸ் ஸ்பிரிண்ட் சர்வதேச போட்டியில் ஆசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான யுபுன் அபேகோன் 20.37 வினாடிகளில் (+0.1 மீ/வி) ஓடி மற்றொரு தேசிய சாதனையை படைத்துள்ளார்.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றிய யுபுன் அபேகோன், எதிர்வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார், மேலும் அவர் இலங்கையில் பதக்க நம்பிக்கையை நிலைநிறுத்த வல்லவர்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னர் யுபுன் அபேகோனின் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக இலங்கை தடகளத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.