இந்தியாவின் கேரளா மாநிலத்தில் படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படகு மூழ்கும் போது அதில் சுமார் 50 பேர் இருந்ததாகவும், ஆனால் அதில் 25 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் அங்குள்ள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.