கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (08) 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கொலன்னாவ நகரசபை, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை, ராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பக்க வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.
லங்கா மின்சார தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொலன்னாவ நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை தேவைக்கேற்ப தண்ணீரை சேகரிக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.