நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் களப்பணிகளில் இருந்து விலகி அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
தனது அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை புலனாய்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கோசல ரங்கநாத் தெரிவித்துள்ளார்.
நாரம்மல பிரதேசத்தில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் மூவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த 05 அதிகாரிகள் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.