வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்றும் (05) நாளையும் (06) நள்ளிரவு 12 மணி வரை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கு டிக்கெட் விநியோகம் நிறைவடையும் என்றும், அதிகாலை 1 மணி வரை வளாகத்தில் தங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த சில நாட்களில் தாமரை கோபுரம் முழுவதுமாக ஒளியூட்டப்பட உள்ளது.