follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP2ஜனாதிபதி புலமைப்பரிசில் - இரு வருடத்திற்கு மாதாந்தம் 5000 ரூபாய்

ஜனாதிபதி புலமைப்பரிசில் – இரு வருடத்திற்கு மாதாந்தம் 5000 ரூபாய்

Published on

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன.

அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்ற 3,000 மாணவ மாணவியருக்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, இதற்காக நாடு முழுவதிலுமுள்ள 100 வலயக் காரியாலயங்களை உள்ளடக்கியதாக வலயமொன்றிற்கு 30 என்ற அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புலமைபரிசில் வழங்களின் அடையாள ரீதியாக மேல்மாகாணத்தின் 11 கல்வி வலயங்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 110 மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் புலைமைப்பிரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் கீழ் புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு க.பொ.த உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை நிறைவு செய்யும் இரு வருட காலப்பகுதிக்கு மாதாந்தம் 5000.00 ரூபாய் வீதம்
வழங்கப்படவுள்ளதோடு அதற்காக 360 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு இணையாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பாடசாலைப் பைகள், அப்பியாச கொப்பிகள், குடை, கடிகாரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பெறுமதியான பரிசில்களும் புலமைப் பரிசில் பெற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்றுக்கொண்ட ஏனைய மாணவர்களுக்கான புலமைப் பரிசில் சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் என்பவற்றை அடுத்த இரு வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

06 கோடியே 63 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை முதல் திறப்பு

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கும் என கிழக்கு மாகாண...

சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கலாசார நிகழ்வு பிரதமர் தலைமையில் கொழும்பில்

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும்...