இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஈரான் சென்றுள்ளார்.
அங்கு அவர் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியையும் சந்தித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை புதிய மட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் போன்ற குழுக்கள் உலகளாவிய புவி-அரசியல் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஈரான் ஜனாதிபதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தனது பயணத்தின் போது ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.