முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்த உரையாடலுக்கு சவால் விடுக்கப்படுவதாக சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சுதந்திர மக்கள் முன்னணியின் கீழ் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானம் தவறான முடிவு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இது இடம்பெற்றுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் சுதந்திர மக்கள் முன்னணியின் கருத்து என்ன என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்;
” .. இந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு மூளை கலங்கியுள்ளது. அவர் கூறுகிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இரும்புக் கட்சி.. அது சரி ஆனால் அதனை கோவணம் கட்டிய கட்சியாக மாற்றியது யார்? மைத்திரிபால தான்..
மைத்திரிபால ஹெலிகாப்டரில் சேர்ந்தது ஏன்? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னர்.. ஆனால் தீர்ப்பு வந்ததும் அதிலிருந்து விலக ரணில் விக்கிரமசிங்கவுடன் டீல் போட்டிருக்கிறார்..
மைத்திரிபால சிறிசேன எங்கு அழைத்தாலும் திறந்த வெளியில் விவாதிக்க டிலான் பெரேரா ஆகிய நான் தயார் என சவால் விடுக்கிறேன்..” அவர் தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.