உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
அதன்படி, நாளை (01) வெளி மாகாணங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், மாவட்டப் பொறுப்பதிகாரிகளான பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான எஸ்.எஸ்.பி.க்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்கியுள்ளது.
இதன்படி, நுகேகொட, நுவரெலியா, கண்டி மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள மே மாத பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தேவையான பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் விசேட போக்குவரத்து திட்டமும் திட்டமிட்டபடி பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
கண்டி நகரிலும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், நகரின் ஊடாக பயணிக்க விரும்பும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.