நாளை (01) நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“..கொழும்பில் நாளை நடைபெறவுள்ள மே தின அணிவகுப்புகள் மற்றும் மே பேரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தினால், போக்குவரத்துக் கடமைகளுக்காக சுமார் 3,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் ஒரு வழிப்பாதையில் பயணிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். மற்ற வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..”