follow the truth

follow the truth

April, 23, 2025
Homeவணிகம்இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக13வது தடவையாகவும் கௌரவிக்கப்பட்ட HNB

இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக13வது தடவையாகவும் கௌரவிக்கப்பட்ட HNB

Published on

வாடிக்கையாளர் வங்கிச் சேவையில் இலங்கையின் மறுக்கமுடியாத முன்னணி நிறுவனமாக தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு, 2023 ஆம் ஆண்டுக்கான Asian Banker Global Excellence இன் வாடிக்கையாளர் நிதிச் சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வில் 13வது தடவையாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக HNB PLC மீண்டும் முடிசூட்டப்பட்டது.

புகழ்பெற்ற ஏசியன் பேங்கர் இதழால் நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வு, உலகின் நுகர்வோர் நிதிச் சேவைகளுக்கான மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், ஸ்திரத்தன்மை, புத்தாக்கம், டிஜிட்டல் செயலாக்கம் மற்றும் விரைவான, நிலையான வளர்ச்சியை அறிமுகப்படுத்துவதற்கான செயல்முறை மறு-பொறியியல் ஆகியவற்றில் புதிய வரையறைகளை நிறுவும் பிராந்திய நிறுவனங்களை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“எங்கள் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு, HNB எப்போதும் ஒருமைப்பாடு மற்றும் சேவையின் அடிப்படையில் கூட்டாண்மைகளை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. 135 ஆண்டுகளுக்கும் மேலாக, எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் திறன்களை தொடர்ந்து மாற்றியமைத்து, பெருமை மற்றும் பொறுப்புணர்வின் வலுவான உணர்வுடன் இந்த பாரம்பரியத்தை நாங்கள் நிலைநிறுத்தி வருகிறோம்.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், 13வது ஆண்டாக ஆசிய வங்கியாளர் சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமையடைகிறோம், இது எங்கள் குழுவின் அர்ப்பணிப்பான முயற்சிகள் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான வங்கி அனுபவங்களை வழங்குவதற்கான எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சான்றாகும். இன்று எமது தேசம் எதிர்கொள்ளும் முன்னோடியில்லாத சவால்களுக்கு மத்தியிலும், எதிர்காலத்தில் இலங்கையின் நிதிய நிலப்பரப்பின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கான உண்மையான பங்காளியாக செயற்படுவோம் என்ற எமது உறுதிமொழியில் நாங்கள் திடமாக இருக்கிறோம்.” என தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் HNBக்கான முதன்மைப் பிரிவாக வாடிக்கையாளர் வங்கி உள்ளது. 255 கிளைகள் மற்றும் 787 சுய-சேவை இயந்திரங்கள் கொண்ட வங்கியின் விரிவான வாடிக்கையாளர் சேவை வலையமைப்பிற்கு கூடுதலாக, HNB டிஜிட்டல் வங்கி தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சேனல்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு தொலைதூரத்தில் பரிவர்த்தனை செய்வதற்கான வசதியான, விரிவான மற்றும் பாதுகாப்பான விருப்பங்களை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது.

கடந்த ஆண்டில், குறிப்பிடத்தக்க சவால்களுக்கு மத்தியிலும் வங்கி மற்றொரு வலுவான மற்றும் நிலையான செயல்திறனை வழங்கியுள்ளது. டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளின் அளவு ஆண்டு முழுவதும் 105% அதிகரித்துள்ளது, இந்த ஆண்டில் வாடிக்கையாளர்கள் 80% அதிகரித்துள்ளனர்.

மேலும், தொழில்நுட்பம் சார்ந்த வங்கிப்பணியில் HNB இன் தலைமையானது, HNB SOLO போன்ற தொடர்ச்சியான திருப்புமுனை தளங்களில் விளைவடைந்துள்ளது – இது வங்கிக் கணக்குகள் மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் இணைக்கப்பட்ட One-stop Shop ஆகும். வணிகர்களுக்கான டிஜிட்டல் கட்டண செலுத்துதல் தீர்வுகளை விரைவாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க, தொழில்நுட்ப நிறுவனங்களுடனான பிரத்யேக கூட்டாண்மை மூலம் வங்கி தனது நிலையை ஒருங்கிணைத்தது.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த HNBஇன் பிரதி பொது முகாமையாளர் வாடிக்கையாளர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கிச் சேவைகள் சஞ்ஜேய் விஜேமான்ன, “HNB ஆனது, Asian Banker சஞ்சிகையால் 13 ஆவது ஆண்டாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக தெரிவு செய்யப்பட்டதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், சிறந்து விளங்குவதற்கான எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புத்தாக்கமான வங்கியியல் தீர்வுகளை வழங்குவதில் எங்களின் உறுதியான கவனத்திற்கு ஒரு சான்றாகும். கடந்த ஆண்டு முழுவதும், வாடிக்கையாளர்களுக்கு வேகமான, வசதியான மற்றும் பாதுகாப்பான வங்கி அனுபவங்களை வழங்குவதற்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். நாம் எதிர்காலத்தை நோக்கிப் பார்க்கையில், இலங்கை முழுவதும் வளர்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு செல்வதற்கு எங்களின் பலம் மற்றும் தனித்துவமான திறன்களைப் பயன்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்,” என தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், மதிப்புமிக்க இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் Best Corporate Citizen Sustainability Awards 2022 விருது வழங்கும் நிகழ்வில் (CCC BCCSA) ஒரு அற்புதமான வெற்றியுடன், பேண்தகைமை, சிறந்த நிர்வாகம் மற்றும் கூட்டுத்தாபனத்தின் சிறந்து விளங்குவதில் உண்மையான தலைமைத்துவத்தை வங்கி உறுதிப்படுத்தியது.

ஒட்டுமொத்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதன் மூலம், ஆளுமைப் பிரிவு வெற்றியாளர், நிதித் துறைக்கான நிலைத்தன்மை சாம்பியன், கோவிட்-19 பிரிவில் Demonstrated Resillient Practices க்கான இரண்டாவது Runner-up, மற்றும் முதல் 10 Best Corporate Citizens பட்டியலில் HNB மேலும் நான்கு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த கௌரவிப்பானது HNBக்கு 13 ஆண்டுகளாக கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், Euromony Trade Finance Survey 2023 இல் ‘சிறந்த சேவை வங்கி’ மற்றும் ‘மார்க்கெட் லீடர்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதேவேளையில், UKஐத் தளமாகக் கொண்ட ‘The Banker Magazine’ மூலம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் முதல் 1,000 வங்கிகளில் HNB தரவரிசைப்படுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...