கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 29ஆம் திகதி 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதி, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எண்ட்ரெகோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துப் பக்கங்களிலும் காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என குறித்த சபை தெரிவித்துள்ளது.
கொலன்னாவ நீரேற்று நிலையத்தின் பிரதான பேனலில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.