அரை சொகுசு பேருந்து சேவையை இரத்து செய்து, அந்த பேருந்துகளை வழக்கமான சேவையாக மாற்றினால், இரவு நேர நீண்ட தூர சேவைகளில் இருந்து விலகுவதாக ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.
அரை சொகுசு பேருந்து சேவையின் பதிவை இரத்து செய்ய போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அரை சொகுசு பேருந்து சேவைகள் நீண்ட தூர சேவையாக செயல்படுவதால், அதில் ஏற முடியாத நிலை இருப்பதாகவும் அந்த மையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்தார்.
இதன் காரணமாக அரை சொகுசு பேருந்துகளின் வருமானம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான நிலையில் அரை சொகுசு சேவையை நீக்கினால் தொலைதூர சேவைகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், பேருந்துகள் பெறும் வருமானம் பகலில் இரவில் பெறப்படாது.
இதன்காரணமாக அரை சொகுசு சேவையை இரத்து செய்து விசேட தொலைதூர சேவை என பெயரிட்டு 1.3 மடங்கு கட்டணத்தை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
தற்போது, அரை சொகுசு சேவையாக, 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்த விரைவு சேவையால், பயணிகள் செலுத்தும் பணத்துடன் தொடர்புடைய சேவை கிடைப்பதாகவும், அவர் கூறினார்.
குறித்த சேவையை முற்றாக நீக்கி வழமையான சேவையாக மாற்றினால் இரவு 8.00 மணிக்கு பின்னர் நீண்ட தூர சேவைகள் வாபஸ் பெறப்படும் எனவும், இவ்வாறான தொழில் முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் பயணிகள் இரவு கட்டணத்தை விட இருமடங்கு செலுத்தி பயணிக்க நேரிடும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.