சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசாங்கம் ஏற்கனவே உடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
உதவி வழங்குவதற்கு சட்டத்தின் மேலாதிக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியதாகவும், ஆனால் அரசாங்கம் பணத்தை பெற்றவுடன் தேர்தலை ஒத்திவைத்ததாகவும், இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் ஜூலை மாதம் பதிலளிக்க வேண்டும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அதற்கேற்ப அரசாங்கத்தினால் தேர்தலை நடத்த முடியும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.