தொடர்ந்து தாமதமாகும் உயர்தர மாணவர்களின் விடைத்தாள்களை மருத்துவர்களால் மதிப்பீடு செய்ய முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்ற முடியும் என சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும், அதற்குப் பதிலாக அரசாங்கம் வேறு தகுதியானவர்களை வேலைக்கு அமர்த்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக கல்வியாளர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க ஒப்பந்தம் எடுக்கும் குழுவே அன்றி நாட்டைப்பற்றிய உணர்வுகளைக் கொண்ட குழு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.