தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்னும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் இதுவரை நேரடியாக தலையிடவில்லை எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹால் வீரரத்ன மேலும் தெரிவித்தார்.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சன் சேனாநாயக்கவும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.