நாடளாவிய ரீதியில் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அறவிடப்படும் நுழைவுக் கட்டணத்தை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் 2008 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கட்டணம் 25 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொட்டாவ – கட்டுநாயக்கவுக்கான புதிய கட்டணம் 400 ரூபா, கட்டுநாயக்கவில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு 1300 ரூபாவும் கொட்டாவையில் இருந்து காலிக்கு 500 ரூபாவுமாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.