சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்றுக்கும், அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சினோபெக் நிறுவன அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது
குழுவுக்கும் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று அமைச்சில் இடம்பெற்றது.
சினோபெக் நிறுவனம் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்றும், இலங்கையில் அதன் விற்பனை செயல்பாடுகள், அன்றிலிருந்து 45 நாட்களுக்குத் தொடங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.