இலங்கை ரக்பி நிர்வாகத்தை கலைத்து, அதன் நற்பெயருக்கும் இலங்கை ரக்பி விளையாட்டிற்கும் சேதம் விளைவிப்பதற்காக ரக்பி நிர்வாகத்திற்கு ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 500 மில்லியன் ரூபா அல்லது 50 கோடி ரூபா நட்டஈடு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கையின் முன்னாள் தலைவர் றிஸ்வி இல்யாஸ் தெரிவித்தார்.
ரக்பி நிர்வாகத்தை கலைத்துவிட்டு குழுவொன்றை நியமித்து 30 வருடங்களுக்கு மேலாக ரக்பி நிர்வாகத்தில் தாம் ஏற்படுத்திய நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு விளையாட்டு அமைச்சுக்கு எதிரான வழக்கு தொடரும் எனவும் ரிஸ்வி இல்யாஸ் குறிப்பிட்டுள்ளார்.