வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பிக்கை மீளப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கி, குறைந்த வருமானம் பெறுபவர்களைப் பாதுகாப்பது அவசியம். அந்நியச் செலாவணி பிரச்சினை மோசமடைந்ததால், வெளிநாட்டு கடன் தொடர்பான வட்டியை செலுத்த முடியவில்லை.
முதல் தடவையாக இவ்வாறானதொரு நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.