இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் விளையாடும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் 06 இலட்சம் இந்திய ரூபா அல்லது அணித்தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட போட்டி கட்டணத்தில் 25% அபராதமாக செலுத்த வேண்டும். இது இலங்கை நாணயத்தில் தோராயமாக இருபத்தி நான்கு இலட்சம் ரூபாவாகும்.
அணித்தலைவர் விராட் கோலிக்கு இந்திய ரூபா 24 இலட்சம் அதாவது தோராயமாக இலங்கை ரூபா 94 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.