follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1அதிகரித்துள்ள மருந்து தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது

அதிகரித்துள்ள மருந்து தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது

Published on

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (25) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த நாட்டில் மருந்து தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் கூறினார். குறிப்பாக கடந்த பத்து வருடங்களை பின்னோக்கிப் பார்க்கும் போது, ​​நாட்டில் மருந்துகளின் தேவை 100% பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், குறிப்பிட்ட அளவு மருந்துப் பற்றாக்குறை எப்போதும் காணப்படுவதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆகவும், உயிர் காக்கும் மருந்துகளின் எண்ணிக்கை 14 ஆகவும் உள்ளது. நாட்டில் உயிர்காக்கும் மருந்துகளின் அளவு குறைவில்லாமல் தொடர்ச்சியாக இருந்ததை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர், தற்போது அந்த மருந்துகள் அனைத்தும் சுகாதார அமைச்சிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நோயாளர்களுக்குத் தேவையான பல மருந்துகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அடுத்த இரண்டு வருடங்களில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளில் 40-50 வீதத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் சுகாதார அமைச்சர் வைத்தியர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் சுட்டிக்காட்டினார். தேவையான அனைத்து அடிப்படை வேலைத்திட்டங்களும் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப அந்த இலக்கை அடைய முடியும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின்...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...