follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுகொழும்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

கொழும்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

Published on

​கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொழும்பு – முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் முகத்துவாரம் எலிஹவுஸ் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சந்தேகபர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விழைவித்தமை , பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியமை, படுகாயமடையச் செய்தமை, கைது செய்த போது தப்பிச் செல்ல முயற்சித்தமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்துள்ளார். எனவே இவருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் இன்று (15) காலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இரு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான...