follow the truth

follow the truth

January, 19, 2025
HomeTOP1உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அநுரவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் லன்சா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அநுரவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் லன்சா

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு அநுர குமாரவை அல்லது விஜித ஹேரத்தினை தான் அழைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா இன்று பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“.. கடந்த ஏப்ரல் 21ம் திகதி நீர் கொழும்பினை சுற்றிவளைப்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அநுர குமார தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் கடந்த நிலையில் அநுர குமார எம்பி நீர்கொழும்பினை சுற்றிவளைக்க போகிறார். இதை என்னவென்று கூறுவது?

இந்த உயரிய சபையில் நான் மிகவும் தெளிவாகக் கூறுகிறேன், அநுர குமார திசாநாயக்க நீர்கொழும்பை சுற்றிவளைக்கவல்ல செல்ல வேண்டும். அநுர குமார திசாநாயக்க இப்ராஹீம் நாநாவின் வீட்டை சுற்றிவளைக்கவே செல்ல வேண்டும். ஏனென்றால், இப்ராஹீம் நாநா மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இப்ராஹீம் நாநாவை விட்டு எமக்கு கதைக்க முடியாது. ஏனெனில் இப்ராஹீம் நாநா வின் மகன்கள் இருவரும், மருமகளும் தான் தற்கொலை தாக்குதலை நடாத்தி தற்கொலை செய்து கொண்டனர்.

அவ்வாறு இருக்க, தேசியப்பட்டியல் மூலம் உறுப்பினர் பதவியை வழங்கிய அநுர குமார திசாநாயக்க நீர்கொழும்புக்கு போய் கூறுகிறார், நீர் கொழும்பினை சுற்றிவளைக்க வேண்டுமாம். எதற்காக நீர்கொழும்பை சுற்றிவளைப்பது போய் இப்ராஹீம் வீட்டை சுற்றிவளைக்க வேண்டியது தானே..

தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு பின்னர் கேள்விப்பட்ட ஜோக்குகளில் ஒன்று தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில் அநுர குமாரவின் நீர்கொழும்பு சுற்றிவளைப்பு.. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோருகிறார்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கத்தோலிக்கர்களை கொலை செய்ததே இப்ராஹீமின் மகன்கள்.. கொலை செய்ததன் பின்னர் அவர்களின் தலைவர் போய் நகைச்சுவைகளை அடுக்கிக் கொண்டு இருக்கிறார். அவரது வெட்க நரம்புகள் துண்டிக்கப்பட்டா இருக்கின்றது?? இல்லை என்றால் வெட்கம் என்று ஒன்று இல்லையா?? நீர்கொழும்பு சென்று கத்தோலிக்க மக்கள் குறித்து கதைக்க துப்பில்லை.. குண்டு வெடித்தபோது அநுர குமார திசாநாயக்க கனடாவில் இருந்தார்.. ஐந்து நாட்கள் சென்று வந்திருந்தார்… நான் அமெரிக்காவில் இருந்தேன். நான் அன்றே நாடு திரும்பினேன், அநுர குமார ஐந்து நாட்களுக்கு பின்னரே வந்தார்.

மக்கள் பற்றிய அந்தளவுக்கு தேவை, வலி இருக்குமாயின் அன்றே வந்திருக்க வேண்டுமே.. வரவில்லையே.. ஆனால் இன்று போய் மரணித்த மக்களின் துன்பத்தினை கண்ணீரை விற்று அரசியல் செய்கிறார், அது தான் எமக்கிருக்கும் துக்கம்..

சும்மா சந்தி சந்தியாக கூடாமல் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள்.. நான் அழைப்பு விடுக்கிறேன்.. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதிக்க நான் பகிரங்க அழைப்பு விடுக்கிறேன். அநுர குமாரவிற்கு அல்லது விஜித ஹேரத்திற்கு… வேறு யாரிலும் வேலை இல்லை…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காலி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல்

காலி - தனிபொல்கஹ சந்தி பகுதியிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக...

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை

பல்வேறு காரணிகளால் இந்நாட்டில் மக்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன...

ஹோட்டல் அறையொன்று உடைந்து விழுந்ததில் 06 மாணவர்கள் காயம்

கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று(18) உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 10...