புத்தாண்டின் பின்னர் முதன்முறையாக பாராளுமன்றம் இன்று (25) காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழ் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை (26) ஆரம்பமாகவுள்ளது.
நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்ததை போன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று(25) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், இன்றைய பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் அது உள்ளடக்கப்படவில்லை.