ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர் பதவியை மாற்றுவது தொடர்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிக்கிறார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.