யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி அதன் உரிமையாளர் வெட்டிவேலு ஜெயேந்திரனை சாணத்தால் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் யாழ்.சிவில் சமூக நிலையத்தின் தலைவர் உட்பட பலரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார்.