தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில், கொழும்பு 4, 5 மற்றும் 7 ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் கொலன்னாவ துணை மின் நிலையத்தின் ஒலிபரப்பு கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பு 08, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இன்னும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.